Tue. Apr 23rd, 2024

தூத்துக்குடி: முருகேசன் நகரில் 3 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்த மாரிச்செல்வம் (24), கார்த்திகா (20) இருவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முருகேசன் நகரைச் சேர்ந்த மாரிச்செல்வமும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த திரு.வி.க நகர் கார்த்திகாவும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். தன் வீட்டார் எதிர்த்த நிலையில் கார்த்திகா வீட்டை வெளியேறி மூன்று நாட்களுக்கு முன்பு மாரிச்செல்வத்தை திருமணம் செய்துள்ளார்.

இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், மாரிச்செல்வம் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர் என்பதால் கார்த்திகாவின் குடும்பத்தினர் இக்கொலையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்கொலை நடந்த இடத்தில் மாவட்ட எஸ்.பி., புறநகர் டி.எஸ்.பி. உள்ளிட்டோர் விசாரணை. கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு.

கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம், ஆட்களை வைத்து இருவரையும் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

முத்துராமலிங்கத்திற்கு 3 பெண் குழந்தைகள் இருந்த நிலையில், மூத்த மகளான கார்த்திகா, பொருளாதார வசதி குறைவான மாரிச் செல்வத்தை காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ததால், இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

Visits: 64

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *