Sun. Jun 23rd, 2024

தமிழ்நாடு அரசு அனுப்பிய மசோதாக்களை நிறைவேற்றாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் வைத்துள்ளதற்கு எதிராக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ணயம் செய்யக்கோரியும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்க்காரியா கமிஷனின் பரிந்துரைகளின் அடிப்படையில், சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மற்றும் அரசியலமைப்பின் 200 வது பிரிவின் கீழ் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர்கள் பரிசீலிப்பதற்கான கால வரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். ஆளுநர்களுக்கு என்று குறிப்பிட்ட காலக்கெடு விதிக்க வேண்டும் என்று உத்தரவிடுமாறு தமிழ்நாடு அரசு இந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளது.

Views: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *