Tue. Apr 23rd, 2024

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

இன்று நடந்த 28 வது போட்டியில் நெதர்லாந்து அணியும், பங்களாதேஷ் அணியும் கொல்கத்தாவில் விளையாடி வருகிறது.

டாஸ் ஜெயித்த நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. களமிறங்கிய நெதர்லாந்து அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 229 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *