Wed. Feb 21st, 2024

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

இன்று நடந்த 26 வது போட்டியில் பாகிஸ்தான் அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் சென்னையில் மோதின.

டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. களமிறங்கிய பாகிஸ்தான் அணி 46.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாபர் அசாம் 50 ரன்களும், சவுத் சகில் 52 ரன்களும் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா அணி சார்பாக தப்ரைஸ் ஷம்சி 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 47.2 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 271 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மார்க் ராம் 91 ரன்கள் எடுத்திருந்தார்.

Visits: 18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *