தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ஆசிரியர் தகுதித் தேர்வு 2-ல் தேர்ச்சிப் பெற்ற பட்டதாரிகள், வரும் நவம்பர் 1ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை ஆன்லைன் வழியாக இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 2024ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி போட்டித் தேர்வு நடைபெறும்.
தமிழ் பாடத்துக்கு 371 பணியிடங்கள், ஆங்கிலப் பாடத்துக்கு 214 பணியிடங்கள், கணிதப் பாடத்துக்கு 200 பணியிடங்கள், இயற்பியல் பாடத்துக்கு 274 பணியிடங்கள், வேதியியல் பாடத்துக்கு 273 பணியிடங்கள், வரலாறு பாடத்துக்கு 346 பணியிடங்கள் உள்பட 2,222 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
இத்தேர்வில் கலந்துகொள்பவர்கள் பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., முடித்திருக்க வேண்டும்.
தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் கூடுதல் தகவல்களை, http://www.trb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
https://www.trb.tn.gov.in/admin/pdf/2603611744BT%20FINAL_25.10.2023.pdf
Hits: 37