Wed. Feb 21st, 2024
jewel

கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. திமுக ஆட்சி அமைந்த உடன் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

2021ஆம் ஆண்டு பயிர் கடன் தள்ளுபடி பெற்றவர்கள், குடும்ப அட்டையின் படி இடம்பெற்றுள்ள குடும்பத்தினர் நகை கடன் தொகை முழுமையாக செலுத்தியவர்கள், 40 கிராமுக்கு மேற்பட்ட நகை கடன் பெற்ற குடும்பத்தினருக்கு தள்ளுபடி செய்யப்படாது என அறிவிக்கப்பட்டது. 40 கிராமுக்கு மேற்பட்டு நகைக்கடன் பெற்றவர்கள், கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர், கூட்டுறவு சங்கங்களில் உள்ள நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர், குடும்ப அட்டை எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள், ஆதார் எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள் , எந்த பொருளும் வேண்டாத குடும்பத்தினர், ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மொத்த எடை 40 கிராமுக்கு கூடுதலாக பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் ஆகியோருக்கு நகைக்கடன் தள்ளுப்படி இல்லை என்று அறிவிக்கப்பட்டது. மேலும் விடுபட்ட பயனாளர்கள் மேல்முறையீடு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகாவில் உள்ள குராயூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயனாளிகள் சிலருக்கு ஒரு நகைக்கடனுக்கு தள்ளுபடியும் இன்னொரு நகைக்கடனுக்கு தள்ளுபடி தரப்படவில்லை. ஆய்வு செய்து மறுபரிசீலனை செய்ய மனுக்கள் கொடுக்கப்பட்டன. மேலும் அலுவலர் பயனாளிகளை நேரில் விசாரித்து சென்று ஒரு ஆண்டை கடந்து விட்டது. பயனாளிகள் தங்களுக்கு எப்போது அரசின் ஒப்புதல் கிடைக்கும் என்று காத்திருக்கின்றனர்.

Visits: 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *