Tue. Apr 23rd, 2024

ஆறுபடை வீடுகளில் முக்கிய கோயிலான பழனி முருகன் கோயிலில் இன்று முதல் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களது செல்போன் மற்றும் கேமராக்களை பாதுகாப்பாக மலையடிவாரத்தில் ஒப்படைத்துச் செல்ல வசதியாக, கோயில் நிர்வாகம் சார்பில் கைப்பேசி வைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ₹5 கட்டணம் செலுத்தி, ரசீதை பெற்றுக்கொண்டு பக்தர்கள் செல்போனை இங்கு வைத்துச் செல்லாலாம். பின் மீண்டும் தரிசனம் முடித்த பின், ரசீதை கொடுத்து செல்போனை பெற்றுச் செல்லலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Visits: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *