Tue. Apr 23rd, 2024

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “நாம் ஆட்சிக்கு வந்த இரண்டாண்டு காலத்தில், இதுவரை 22 ஆயிரம் அரசுப் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளோம். நடப்பாண்டில் மேலும் 17 ஆயிரம் பேரும், அடுத்த இரண்டாண்டுகளில் 50 ஆயிரம் பேரும் புதிதாகப் பல்வேறு பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.

அரசு ஊழியர்களாக இன்று பணி நியமன ஆணை பெற்றவர்களுக்குத் தந்தையின் நிலையில் இருந்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதோடு; அமைச்சர்கள், உயரதிகாரிகள் முதல் கடைநிலை அரசு ஊழியர் வரை அனைவருக்கும் ஒரு வேண்டுகோளையும் வைத்தேன்:

உங்களிடம் கோரிக்கை வைக்கவோ, மனு அளிக்கவோ வரும் பொதுமக்களின் சுயமரியாதையைக் காக்கும் வகையில் அவர்களை உட்கார வைத்து, அவர்களின் தேவையைக் காது கொடுத்துக் கேளுங்கள். அதுவே அவர்களின் பாதிக் கவலையைத் தீர்த்து விடும். ‘இது நமது அரசு’ என்ற நம்பிக்கையை அவர்களுக்குத் தந்துவிடும்.”

Visits: 18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *