மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்று இன்றோடு 856 நாட்களாகிறது.1000 ஆவது கோயில் கும்பாபிஷேகத்தை செப்.,10 அன்று மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயிலில் நிகழ்த்துகிறது இந்து சமய அறநிலையத்துறை.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள்முதல் சராசரியாக தினம் ஒரு கோயிலில் குடமுழுக்கு நடந்து கொண்டிருக்கிறது.
கோயில் நிலங்களை மீட்டது, கோயில் சொத்துக்களை முறைப்படுத்தியது, நிர்வாக சீர்கேடுகளை களைந்தது என பி.கே.சேகர் பாபு அமைச்சராக இருப்பது அறநிலையத்துறையின் பொற்காலம்.
மேலும் அறநிலையத்துறை அதிகாரிகளும் சிறப்பாக வழிநடத்துகின்றனர்.
“எல்லார்க்கும் எல்லாம்” என்ற #DravidianModel ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது.
இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
மேலும் 2 ஆண்டுகளில், 5,137 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிக்கபட்ட கோவில் சொத்துக்களை திமுக அரசு மீட்டுள்ளது.
Hits: 35