சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், ” மாநாட்டுக்கு சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயர் வைத்த நிர்வாகக் குழுவுக்கு பாராட்டு தெரிவித்தார். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே சிறந்தது என தெரிவித்தார். டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற தொற்று நோய்களை எதிர்க்க போராட மாட்டோம். ஒழித்து கட்ட தான் முயற்சிப்போம். அதுபோல தான் சனாதனம் என்றும் தெரிவித்தார்.
மேலும், சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்ததாக தெரிவித்த அவர், நிலையானதாகவும், மாற்ற முடியாததாகவும் இருப்பதன் அர்த்தமே சனாதனம் என்றும் கூறினார். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது, அனைத்தையும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்கு உருவான இயக்கம்தான் கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும் என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட போது, இந்திய விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸின் பங்களிப்பு என்ற புத்தகத்தை வெளியிடக் கேட்டுக் கொண்டார்கள்.
விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸ் எந்த பங்களிப்பும் செய்யாத நிலையில், மிகப்பெரிய அளவில் இருந்த அந்தப் புத்தகத்தை பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது. அப்படி என்னதான் பங்களிப்பு செய்தார்கள் என்று திறந்து பார்த்தோம். முதல் பக்கத்திலேயே ஆங்கிலேயர் காலணியை நாவால் வருடுகிற புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
அடுத்து காந்தியார் கொலையை குறிக்கின்ற வகையிலான சித்திரம் வந்தது. அடுத்தடுத்த பக்கங்கள் அனைத்தும் காலியாக இருந்தன. ஏனென்று கேட்ட போது, நீங்களும் அந்த வரலாற்றை நிரப்பலாம் என்று கையில் பேனாவைத் தந்தார்கள். மூன்று பெரிய பூஜ்ஜியங்களை வரைந்தோம்.
இப்படிப்பட்ட பூஜ்ய வரலாற்றைக் கொண்ட சனாதனவாதிகளை மக்களிடம் அம்பலப்படுத்திய த.மு.எ.க.ச தோழர்களுக்கு வாழ்த்துகள். தேர்தல் களத்தில் பாசிஸ்ட்டுகளை வீழ்த்தி சனாதனத்தை ஒழிப்போம் என்று கூறியுள்ளார்.
Hits: 13