இங்கிலாந்து அணியும் நியூசிலாந்து அணியும் இன்று இரண்டாவது டி20 யில் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவ் 86 (60), ஹாரி புரூக் 67 (36) இருவரும் சிறப்பாக விளையாடினர். 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது.
199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சில் 13.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்கள் எடுத்து 95 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இங்கிலாந்து தரப்பில் குஸ் அட்கின்சன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இங்கிலாந்து அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Hits: 14