உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த மே மாதம் நடந்த உள்ளாட்சித்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட சுஷ்மா கார்க்வால் வெற்றிபெற்று லக்னோவின் புதிய மேயராக 25-ம் தேதி தான் பதவியேற்றார்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக பிஜேபியில் இருக்கும் அவர்,மேயராக பதவியேற்று சரியாக 3 மாதங்கள் கூட ஆகவில்லை.
இந்நிலையில்,மேயர் சுஷ்மா காரக்வால், லக்னோவில் இருக்கும் விநாயக் மெடிகேர் என்ற உள்ளூர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வரும் சுரேன் குமார் என்ற நபரை நலம் விசாரிப்பதற்காக சென்றுள்ளார் என்று தெரிகிறது
ஆனால் அவரோ தீவிர சிகிச்சைப்பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால் மருத்துவமனையின் ஊழியர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் நுழைவதற்கு முன்பு காலணிகளை அகற்றுமாறு மேயரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனால் மேயர், உடன் வந்தவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு உடனடியாக புல்டோசர் வாகனம் வரவழைக்கப்படுகிறது. எந்த தகவலும் இல்லாமல் புல்டோசர் வருகிறதென்று காவல்துறை பதறியடித்து ஓடிவருகிறது.
பின்னர் போலீசார் பேசி நிலைமையை சமாதானம் செய்தனர். அதன் பிறகே புல்டோசர் வாகனம் அங்கிருந்து கிளம்பிச்சென்றது.
Hits: 16