நாங்குநேரி அம்பிகா – முனியாண்டி ஆகியோரின் மகனான சின்னத்துரை வள்ளியூர் கண்கார்டியா பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சின்னத்துரையுடன் மாற்று சமூகத்தைச் சார்ந்த மாணவர்களும் படிக்கிறார்கள். சில நாட்களாக சின்னத்துரை பள்ளிக்கு செல்லவில்லை.
பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும் சின்னதுரையை தாயார் அம்பிகா ஏன் பள்ளிக்கூடம் செல்லவில்லை என்று கேட்டிருக்கிறார் சின்னதுரை சக மாணவர்கள் தன்னை அடிக்கிறார்கள், துன்புறுத்துகிறார்கள் என்று கூறியிருக்கிறார். உடனே அம்பிகா தனது மகனை பள்ளிக்கு அழைத்து சென்று ஆசிரியரிடம் முறையிட்டு இருக்கிறார்; ஆசிரியரும் சின்னதுரையை துன்புறுத்திய மாற்று சமூக மாணவர்களை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி இருக்கிறார்.
நடந்த எல்லாவற்றையும் கூறி ஆசிரியர் தங்களை எச்சரிக்கும் அளவுக்கு வந்துவிட்டது அதனால் இவனை சும்மா விட கூடாது என்று திட்டம் தீட்டி இருக்கிறார்கள். மாற்று சமூகத்தை சேர்ந்த மூன்று மாணவர்களும் சின்னதுரையை எச்சரித்திருக்கிறார்கள்; அப்போது ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் அவர்கள் தாக்குதலில் ஈடுபடாமல் சென்று விட்டனர். பின்னர் இரவு ஆட்கள் நடமாட்டம் குறைந்த பின்னர் சின்னதுரையின் வீட்டுக்குள் புகுந்து சின்னதுரையை சரமாரி வெட்டி இருக்கிறார்கள்; தன் மீது விழும் வெட்டை தடுக்க கைகளைக் கொண்டு தடுக்க முற்பட்ட சின்னத்துரைக்கு தலையில் ஒரு வெட்டும், வலது கையில் மூன்று வெட்டு, இடது கையில் இரண்டு வெட்டு, தொடை, பாதம் என பல இடங்களில் பலமான வெட்டு காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது இதனை தடுக்க சென்ற சின்னதுரையின் சகோதரிக்கும் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது.
தற்போது மாணவன் சின்னத்துரை மற்றும் சின்னத்துறையின் சகோதரி இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து குற்றத்தில் ஈடுபட்ட 6 சிறார்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் கொலை முயற்சி உட்பட 5 வழக்குகள் பதியப்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.
Hits: 8