ஜூலை 22 அன்று குஜராத்திற்கு எருமைகளை பிக்-அப் வேனில் ஏற்றிச் சென்றதற்காக உமேத் கான் பலூச்சை பசு காவலர்கள் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மேலும் அவரை ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழங்கும்படி கூறி அடித்து துன்புறுத்தியுள்ளனர். குஜராத்தில் நடந்த சம்பவம், இந்தச் செய்தியை எந்தச் செய்திச் நிறுவனமும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சோரப்கான் பலோச் அளித்த புகாரின் பேரில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பின்னர் குற்றம் சாட்டப்பட்ட அகேராஜ்சிங் பர்பத்சிங் வகேலா, செல்சின் சுஜன்சிங் சோலங்கி, ஈஸ்வர்பாய் முல்சங்கர்பாய் புரோகித் மற்றும் மகேந்திரசிங் வதன்சிங் சோலங்கி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தது.
உமேத் கான் தற்போது உள்ளூர் மருத்துவமனையில் காயங்களிலிருந்து மீண்டு வருகிறார்.
இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவருக்கு எதிராக பிரிவுகள் 279 (வேகமாக ஓட்டுதல்) மற்றும் பிரிவு 11 ஆகியவற்றின் கீழ் இரண்டாவது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
Hits: 14