Tue. Apr 23rd, 2024

சென்னை வில்லிவாக்கம் ராஜாஜி நகரை சேர்ந்தவர் சரண்யா இவரது 7 வயது மகனுக்கு ஆட்டிசம் பாதிப்பால் பேச்சு குறைபாடு உள்ள நிலையில், வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் உள்ள மை பாட்டி வீடு என்ற தனியார் மழலையர் பள்ளியில் சேர்த்துள்ளார்.

சிறுவன் படித்து வரும் பள்ளியில் பணியாற்ற இன்டர்ன்ஷிப் வந்த கல்லூரி மாணவர்கள் சிறுவன் அங்கு சித்தரவதை செய்யப்படுவதாகவும், கை, கால்கள் கட்டப்படுவதாகவும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

சிறுவனின் தாய் சரண்யா உடனே மழலையர் பள்ளி உரிமையாளரும், பாஜக மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான மீனாட்சியிடம் சென்று தனது மகனை துன்புறுத்தியது குறித்து கேட்டுள்ளார்.

அப்போது மீனாட்சி அப்படி தான் செய்வோம் என்று தெனாவட்டாக பதிலளித்ததுடன் சரண்யாவை மிரட்டியுள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட சரண்யா இது குறித்து வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார், அளித்ததன் போலீசார் விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் விசாரணையில் சிறுவனை துன்புறுத்தியதுடன் அதனை கேட்க சென்ற தாய் சரண்யாவை பள்ளி உரிமையாளர் மீனாட்சி மிரட்டியது தெரியவந்தது..

இதனையடுத்து போலீஸார் மீனாட்சி மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடை

Visits: 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *