Wed. Feb 28th, 2024

உலகக் கோப்பை -2007, டி20 கிரிக்கெட் போட்டியை இந்திய அணி மகேந்திர சிங் தோனி தலைமையில் விளையாடி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றி தோனியின் தலைமையில் சென்றதால் மட்டுமே சாத்தியமானது என்று பல்வேறு தரப்பினரும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களது கருத்துக் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி குறித்த ரசிகர்களின் பதிவிற்கு பதிலலித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ட்வீட் “இந்தியாவில் இருந்து அவர் மட்டும் தனியாக விளையாடி உலக கோப்பைகளை வென்றாரா? மற்ற 10 வீரர்கள் விளையாடவில்லையா… ஆஸ்திரேலியா போன்ற மற்ற நாடுகள் கோப்பையை வென்றால் அது டீம் வொர்க். ஆனால் இந்தியா வென்றால் அது கேப்டனால் வென்றதாக சொல்கிறார்கள். இது குழுவாக விளையாடும் விளையாட்டு. சேர்ந்து வெற்றி பெற வேண்டும், சேர்ந்து தோல்வி அடைய வேண்டும்.”

Visits: 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *