Wed. Feb 28th, 2024

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் கூறியதாவது “பல்கலை. பட்டமளிப்பு விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராக ஒன்றிய அமைச்சர்களை அழைத்து வர வேண்டும் என ஆளுநர் விரும்புகிறார்; இதன் காரணமாகவே தாமதம் ஏற்படுகிறது

கல்லூரி படிப்பை முடித்த 9.29 லட்சம் மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் காத்திருக்கின்றனர்.

கோவை பாரதியார் பல்கலை. துணை வேந்தர் தேர்வு செய்ய 2022ம் ஆண்டு அக்டோபரிலேயே குழு அமைத்து தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு அனுப்பியது; ஆனால், ஒப்புதல் அளிக்காமலேயே ஆளுநர் இருக்கிறார்

கோவை பாரதியார் பல்கலை. துணை வேந்தரை தேர்வு செய்ய மூவர் குழுவை கடந்தாண்டு அக்டோபரிலேயே அரசு அமைத்தது; ஆனால், யு.ஜி.சி. சார்பில் பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என ஆளுநர் நிர்பந்திக்கிறார்; அப்படி ஒரு விதியே இல்லை

சட்டத்திற்கு புறம்பாக ஆளுநர் செயல்பட விரும்புகிறாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Visits: 19

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *