Tue. Apr 23rd, 2024

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் நிறுவனர், தலைவர், பெ.ஜான்பாண்டியன் எம்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் என்ற கல்லூரி இளைஞர் 2015 ஆம் ஆண்டு ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி யுவராஜ், உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். அதேபோல வழக்கில் சங்கர் உள்ளிட்ட ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் திருமதி.சித்ரா அவர்கள் மற்றும் சிபிசிஐடி தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டனர்.

இந்த மேல்முறையீட்டு வழக்கு சென்னை ஐகோர்ட்டு இன்று வந்துள்ளது. ஐகோர்ட்டு தீர்ப்பளித்திருப்பது பெரும் ஆறுதல் அளிக்கிறது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி உள்ளது என்றும், மதுரை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என்றும், யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும். என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு சாதி வெறியர்களுக்கு ஒரு மிகப்பெரிய சவுக்கடியாகும்.
ஆணவப் படுகொலை இனி தடுக்கப்படும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. நீதி வென்றுள்ளது என்று கூறவேண்டும். சாமானியாருக்கு சட்டம் பாதுகாப்பாக உள்ளது என்ற எண்ணம் நல்ல உணர்வு ஏற்படுத்திய தீர்ப்பு என்று கருதுகிறேன்.கோகுல்ராஜ் கொலை வழக்கில் பல அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல் வெற்றிகரமாக வழக்கினை வாதாடி கொலையாளிகள் வாழ்நாள் தண்டனை பெற்று தந்த வழக்கறிஞர் திரு.பா.ப.மோகன் அவர்களுக்கு எமது பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதனைபோல், இனிவரும் காலங்களில் ஆணவப் படுகொலையை தடுத்திட ஏதுவாக புதிய சட்டமியற்றிட வேண்டுமென மத்திய,மாநில அரசை வலியுறுத்துகிறேன்.

“நீதி சாகவில்லை நிலைபெற்றுள்ளது என்பதனை இந்த நீதி விளக்குகிறது,
நீதியே என்றும் வெல்லும்”.”

Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *