Tue. Apr 23rd, 2024

சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜும் நாமக்கல்லை சேர்ந்த சுவாதியும் காதலித்து வந்தனர். இந்நிலையில் 2015-ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி கல்லூரிக்குச் செல்வதாக சொல்லிவிட்டு சென்ற கோகுல்ராஜ் மறுநாள் காலை நாமக்கல் தொட்டிபாளையம் தண்டவாளத்தில் தலைவேறு உடல்வேறாக கிடந்தார். மேலும் அவரது நாக்கும் துண்டிக்கப்பட்டிருந்தது.

கோகுல்ராஜ் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கும்போது உறவினர்கள் குற்றவாளிகளை தண்டிக்காமல் வாங்கமாட்டோம் என்று மறுத்துவிட்டனர். பிறகு சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை டிஎஸ்பி விஷ்னுபிரியவிடம் ஒப்படைத்தது. இந்த வழக்கை விசாரிக்கையில் டிஎஸ்பி விஷ்னுபிரியா தற்கொலை செய்துகொண்டார்.

தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேர் கைது செய்யப்பட்டனர். 5ம் தேதி குற்றம் உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்று மதுரை மாவட்ட வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.

மேலும், யுவராஜின் டிரைவர் அருணுக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனையும் மற்றும் குமார், சதிஸ்குமார், ரகு, ரஞ்சித் செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனையும், சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனையும், பிரபு மற்றும் கிரிதருக்கு ஆயுள் தண்டனையுடன் 5 வருட கடுங்காவல் தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதித்து மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தண்டனையை எதிர்த்து யுவராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றமும் ஆயுள்தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

Visits: 16

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *