சி.பி.ஐ(எம்) வெளியிட்ட கண்டன அறிக்கை “தமிழ்நாட்டில் 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் பறிக்கப்படும் என்ற அதிர்ச்சிகரமான செய்தியை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டது, மாணவர் சேர்க்கையும் இதனால் தடைபட்டுள்ளது கண்டனத்திற்குரியதாகும்.
இந்தியாவிலேயே அதிகமான அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்டுள்ள தமிழ்நாடு, மருத்துவ சேவையிலும், மருத்துவக் கல்வியிலும் சிறந்து விளங்குகிறது.
இந்த நிலையில், சென்னையில் செயல்படும் புகழ்பெற்ற ஸ்டான்லின் அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ விசுவநாதம் மருத்துவக் கல்லூரி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவைகளில் வருகைப் பதிவினை ஆதாருடன் இணைக்கவில்லை, சி.சி.டி.வி காட்சிகளை இணையம் வழியாக பார்க்க முடியவில்லை என்ற காரணங்களை சொல்லி அங்கீகாரம் ரத்து செய்வதாக தேசிய மருத்துவ ஆணையம் சொல்கிறது, மாணவர் சேர்க்கையும் தடைபட்டுள்ளது.
இந்த முயற்சி தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரி கட்டமைப்பை அவமதிக்கும் செயல் என்பதுடன், மாநில நிர்வாகத்தினை கிள்ளுக்கீரையாக கருதும் அதிகாரக் குவிப்பு போக்கும் அதில் வெளிப்படுகிறது.
அங்கீகாரம் ரத்து பற்றிய தனது அறிக்கையை தேசிய மருத்துவ ஆணையம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.மாநில அரசாங்கத்தின் பதில்களை ஏற்பதுடன் – கண்காணிப்பு நடவடிக்கைகளை மத்தியப்படுத்தும் அவசியமற்ற, சாத்தியமற்ற முயற்சிகளை ஒன்றிய அரசாங்கம் திரும்பப் பெற்றிட வேண்டும் என்றும் சி.பி.ஐ(எம்) சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.”
Hits: 2