தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தையடுத்த எக்கியார் குப்பத்தைச்சேந்த 9 பேரும்,செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தையடுத்த சித்தாமூரைச் சேர்ந்த 4 பேரும் அடுத்தடுத்து இறந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிராக சிறுவன் ஒருவன் மது அருந்தியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவை வெளியிட்டவர் குஜராத் மாநிலம் வதோராதராவைச் சேர்ந்த லக்ஷ்மன் முனியா அவர்கள் நிர்வகிக்கும் timli_king_bhilpradesh_15 பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அந்த வீடியோவின் கீழ் “மது உடலுக்கு தீங்க விளைவிக்கும் எனவே மது அருந்தாதீர்கள். இந்த வீடியோ பொழுதுபோக்கிற்காக மட்டுமே எடுக்கப்பட்டது. வீடியோவில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் எனக்கு மெசேஜ் செய்யவும்” என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த வீடியோவில் வேறொரு மொழி பாடலும் இடம்பெற்றிருந்தது.
https://www.instagram.com/reel/CrmZJq6A0lf/?igshid=NTc4MTIwNjQ2YQ==
Hits: 11