பெ.ஜான்பாண்டியன் எம்.ஏ., நிறுவனர் – தலைவர் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “மதுக்கடைகளுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதும் மிகப் பெரிய எழுச்சியாக மதுவுக்கு எதிரான இந்தப் போராட்டங்கள் இன்றளவும் இது மாறவில்லை. குறிப்பாக “தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் கொடுமைக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்; சமீபத்தில் ஒரு காணொளி கண்டேன் அதில் ஒரு சிறுவன் மது அருந்தி மது போதையில் கீழே நிலை தடுமாறி விழுகிறான். எனவே மக்களின் நலனில் அக்கறை கொண்டு தமிழக அரசு முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
மேலும், செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே காரணைப்புதுச்சேரி என்ற இடத்தில் செயல்பட்டு வந்த மதுக்கடையையும், அதன் பாரையும் அப்பகுதியைச் சேர்ந்த 50க்கு மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு கடையை மூடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது அதனை பொருட்படுத்தாமல் மதுக்கடை ஊழியர் தொடர்ந்து மது விற்பனை செய்துக்கொண்டிருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் அங்கிருந்த காலி பாட்டில்களை மதுக்கடைக்கு முன்பாக உடைத்தனர். மதுவுக்கு எதிராக மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு கோபம் தலைவிரித்தாடுகிறது என்பதற்கான எடுத்துக்காட்டு தான் இந்த மதுக்கடையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம். பெண்கள் கடைபிடித்த வழிமுறை வேண்டுமானால் சரியானதாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் அவர்கள் மதுவுக்கு எதிரான அவர்களின் உணர்வு மதிக்கத்தக்கது. அவர்களின் போராட்ட உணர்வை நான் பாராட்டுகிறேன்.
தமிழகத்தில் சமீபக் காலமாக கள்ளச்சாராயம் புழக்கம் அதிகமாக காணப்படுகிறது. அதில் ஒன்று தான் கடலூர் மாவட்டத்தில் 24 மணிநேரத்தில் இதுவரை கள்ளச்சாராயம் விற்றதாக கூறி காவல்துறை 88 பேரில் 22 பேர் சிறையில் அடித்துள்ளனர். நேற்றைய தினம் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளசாராயம் உட்கொண்டதால் மூவர் உயிரிழந்த செய்தியை அனைவரும் அறிந்திருப்பீர்கள். இதனைப்போல் தமிழகத்தில் கஞ்சா, குட்காவை தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனையும் கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டுருக்கிறது.
எனவே, தமிழக மக்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்துகிறது இந்த திமுக அரசு – மதுக்கடை, கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம், போன்றவைகள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அதனினும் உச்சம் தான் இந்த மதுக்கடை சூறையாடிய சம்பவம். காரணைப்புதுச்சேரி பகுதியில் செயல்பட்டு வரும் சர்ச்சைக்குரிய மதுக்கடை மற்றும் பாரை தமிழக அரசு உடனடியாக மூட வேண்டும்; தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை அமல்படுத்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.”
Hits: 5