வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட் & சிக்ஸ் ஸ்டார் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெளியாகும் திரைப்படம் “யாத்திசை” . இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் சக்தி மித்ரன், சேயோன், ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சக்ரவர்த்தி இசையில் தரணி ராசேந்திரன் எழுதி இயக்கியுள்ளார். படத்திற்கு அகிலேஷ் காத்தமுத்து ஒளிப்பதிவு செய்துள்ளார். சக்ரவர்த்தி இசையமைத்துள்ளார்.
பாண்டியர்களின் வரலாற்றை மையப்படுத்தி வெளியாக உள்ளது.
படத்தின் மிரட்டலான டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Hits: 30