தெருநாய்களின் வெறி ஆட்டம் இந்தியாவில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் 2022 ஆம் ஆண்டில் 3.5 லட்சம், தமிழ்நாட்டில் 3லட்சம், ஆந்திராவில் 1லட்சம் நாய்க்கடி வழக்குகளுடன் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் ரேபிஸ் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 20,000 பேரைக் கொல்கிறது. இது உலகின் நாய்கடி வழக்குகளில் 36 சதவீதம் ஆகும். ஒரு பிட்புல் நாய் தனது எஜமானியை கடித்து கொன்றது. 12 வயது சிறுமி ஒருவர் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் வழியில் தெருநாய்களால் தாக்கப்பட்டார்.
தெருநாய்கள் கும்பலால் 3 வயது குழந்தை கடித்துக் கொல்லப்பட்டது. ஜனவரி 2022 முதல் ஜூலை 2022 வரை, 14.50 லட்சத்துக்கும் அதிகமானோர் விலங்குகள் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 24 லட்சத்தைத் தாண்டியிருக்கும்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையின்படி, உலகிலேயே அதிக ரேபிஸ் இறப்புகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் ரேபிஸ் இறப்புகளில் மிகவும் கவலைக்குரிய பகுதி என்னவென்றால், பதிவான இறப்புகளில் 30-60% 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளாகும்.
இதற்கிடையில், 2030ம் ஆண்டுக்குள் ரேபிஸ் நோயை நாட்டிலிருந்து ஒழிக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.நாட்டில் தெருநாய்களின் எண்ணிக்கை, நாடாளுமன்றத்தில் அரசு அளித்த தகவலின்படி, 2019-ம் ஆண்டில் அவற்றின் மக்கள் தொகை சுமார் 1.2 கோடியாக இருந்தது.
உத்திரப்பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தெருநாய்கள் அதிகம். கோவிட் லாக்டவுன் காலத்தில் தெருநாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வெறி நாய் கடித்து ரேபிஸ் நோயால் பதிக்க பட்ட ஒரு நபர் தண்ணீர் கண்டு அஞ்சும்(Hydrophobia) நிலைகு தள்ளபடுகிறார். கடைசியாக, அவர் இறந்துவிடுகிறார்.
Hits: 8