தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கையில் “பல்கலைக்கழகங்கள் கல்வி கற்பதற்கான இடம் மட்டுமல்ல கருத்து வேறுபாடுகள், விவாதங்களுக்கான இடமும் கூட! டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மாணவர்களை கோழைத்தனமாக தாக்கி பெரியார், மார்க்ஸ் உள்ளிட்டோரின் புகைப்படங்களை சூறையாடிய ஏ.பி.வி.பி. அமைப்பினரின் செயல் கண்டனத்திற்குரியது; அவர்கள் மீது நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! தங்களது உரிமைக்காகவும், ஒன்றிய பாஜகவுக்கு எதிராகவும் போராடும் மாணவர்கள் மீது தொடர்ந்து வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவதை, டெல்லி காவல்துறையும், ஜேஎன்யு பல்கலை.,காவலர்களும் கை கட்டி வேடிக்கை பார்க்கின்றனர்.”
Hits: 18