இந்திய சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து அணி இந்திய அணியுடன் ஒரு நாள் போட்டியில் மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் கில் அதிரடியால் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கில் 208 (149) அடித்தார்.
350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ப்ரஸ்வெல் 140 (78) அடித்தும் அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி சார்பாக சிராஜ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Hits: 2