இந்திய சுற்றுப்பயணம் வந்துள்ள இலங்கை அணி தனது முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் மும்பையில் மோதியது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் இஷான் கிஷான் 37 (29) ரன்கள் அடித்து அவுட் ஆனார். பின் களமிறங்கிய கில், சூர்யகுமார் யாதவ், சாம்சன் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். ஹர்டிக் பாண்டியா 29 (27) ரன்கள் அடித்து அவுட் ஆனார். பின்னர் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. தீபக் ஹூடா 41 (23) ரன்களிலும், அக்சர் படேல் 31 (21) அவுட் ஆகாமல் களத்தில் நின்றனர்.
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியை 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
Hits: 6