Wed. Feb 28th, 2024

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் தொடரில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியும் மோதின.டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியில் ஆரோன் பின்ச் 65 (48) உதவியால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி சார்பாக ஆண்ட்ரு டை 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 19.4 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *