Wed. May 29th, 2024

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி “நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம் மற்றும் கிராமம் மேட்டுத் தெரு பகுதியில் இன்று அதிகாலையில் அனுமதியின்றி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறிய விபத்தில் திரு.தில்லைக்குமார் (வயது 35), திருமதி. பிரியா (வயது 28), திருமதி.செல்வி (வயது 55) மற்றும் திருமதி.பெரியக்காள் (வயது 73) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேட்டு நாமக்கல் மிகுந்த வருத்தமடைந்தேன். இவ்விபத்தில் மருத்துவமனையில் காயமுற்றவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும்
தெரிவித்துக்கொள்வதோடு தலா ரூபாய் இரண்டு குடும்பத்தினருக்கு மற்றும் காயமுற்றவர்களுக்கு தலா ரூபாய் ஐம்பதாயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.”

Views: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *