Thu. Mar 28th, 2024

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசம் சுற்றுப்பயணம் சென்று விளையாடி வருகிறது. இந்தியா அணி வங்கதேச அணியுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியை விளையாடியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதல் இன்னிங்சில் களமிறங்கிய வங்கதேச அணி 73.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி முதல் இன்னிங்க்சில் 314 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இரண்டாவது இன்னிங்க்சில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் எடுத்தது.

145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 47 ஓவர்களில் 7 விக்கெட்டுகளைஇழந்து 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது

Visits: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *