Wed. Feb 28th, 2024

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், தில்லம்பட்டி கிராமத்தில் வசிக்கும் கிரிஜா என்ற 11 வயது சிறுமிக்கு ஏற்பட்ட அரியவகை தோல் நோயினால் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்த தகவலறிந்ததும் அச்சிறுமியின் இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்ததுடன், கிரிஜாவின் மருத்துவ செலவிற்கும், மேல் சிகிச்சைக்கும் மருத்துவர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு பரிந்துரை செய்தார். அப்போது சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் மற்றும் அரசு அதிகாரிகள் ,மருத்துவர்கள் உடனிருந்தனர்.

Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *