Sat. Apr 20th, 2024

சிக்கிம் மாநிலத்தில் உள்ள சாட்டன் பகுதியிலிருந்து தாங்கு பகுதிக்கு 3 ராணுவ வாகனங்களில் வீரர்கள் சென்றனர். செமா பகுதியில் வாகனம் சென்று கொண்டிருக்கும்போது ஒரு வளைவில் 1 ராணுவ வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கு பகுதியில் விழுந்தது.

உடனடியாக மீட்பு படையினர் விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அந்த வாகனத்தில் இருந்த 16 வீரர்கள் இறந்ததாகவும் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *