Wed. Feb 28th, 2024

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழ்நாட்டில் இனி வரும் காலங்களில் அனைத்து கோயில்களில் குட முழுக்குகளில் சமஸ்கிருத மந்திரங்களுக்கு இணையாக, தமிழ் மந்திரங்கள் பயன்படுத்த வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டிருந்தது. அதேபோன்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளையின் உத்தரவு இருக்கிறது.

ஆனால், கோயில் கருவறையில் தமிழில் மந்திரங்கள் ஓதி, அர்ச்சனை செய்ய அரசாணைகள் இருந்தும் கூட, அவை நடைமுறையில் செயல்படுத்தப்படுவதில்லை. தற்போதைய திமுக அரசு தமிழ் அர்ச்சனைக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது.

ஆனால் தமிழில் அர்ச்சனை செய்பவர்கள் கருவறைக்குள் இல்லை. தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினால், இங்கு வழக்கமாக இருக்கக்கூடிய அர்ச்சகர்கள் மறுப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், தமிழர் கடவுளான பழனி முருகன் திருக்கோயில் குட முழுக்கு வரும் 2023 ஜனவரி 27ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்க் கடவுள் முருகன் கோவிலின் குடமுழுக்கை முழுமையாக தமிழிலே மந்திரங்களை ஓதுவதே சிறப்பானதாகும்.”

Visits: 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *