Wed. Feb 21st, 2024

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்திய அரசு மாநிலங்களில் கொரோனா கேஸ்களில் ஜீனோம் பரிசோதனையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது.

சீனா:
சீனாவில் நேற்று மட்டும் 4000 புதிய கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன. மேலும் இதுவரை கொரோனவால் 5242 பேர் பலியாகியுள்ளனர். முக்கியமாக வயதானவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஹாங்காங் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின்படி வரும் ஏப்ரல் மாதத்திற்குள் 5 லட்சம் பேர் இறக்கக்கூடும் இல்லையெனில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 15 லட்சம் பேர் இறக்கக்கூடும் என கூறியுள்ளனர்.

இந்தியா:
சீனாவில் அதிகரித்து வரும் கொரோனாவால் இந்திய அரசு மாநில அரசுகளுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கொரோனா கேஸ்களில் ஜீனோம் பரிசோதனையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று மட்டும் 112 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன. மேலும் 3490 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளன.

ஜீனோம் பரிசோதனையை INSACOG ஆய்வு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு இந்தியாவில் 50 பரிசோதனை மையங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *