Wed. Feb 28th, 2024

பூவுலகின் நண்பர்கள் ஜி.சுந்தர்ராஜன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “கூடங்குளம் அணுவுலைக்கு எதிரான போராட்டம் நடைபெற்ற போது வைக்கப்பட்ட முக்கியமான கேள்வி, அணுவுலையில் இருந்து வரும் அணுக்கழிவுகளை என்ன செய்யப்போகிறீர்கள் என்பதுதான். உச்சநீதிமன்றத்தில், அன்றைய தலைமை வழக்குரைஞர் ஆஜராகி (ஒரு வெள்ளிக்கிழமை பிற்பகல்) கூடங்குளம் அணுக்கழிவுகள், கர்நாடக மாநிலம் கோலாரில் உள்ள சுரங்கங்களில் வைக்கப்படும் என்று தெரிவித்தார். அடுத்த இரண்டு தினங்கள் கர்நாடக மாநிலம் கொந்தளித்தது, அன்றைய பாஜக முதல்வர்”ஜெகதீஷ் ஷெட்டர்”,”கோலாரில் மட்டுமல்ல, கர்நாடகாவின் எந்த பகுதியிலும் இரட்டை நிலைப்பாடு. அதேதான் இப்போதும் தொடர்கிறது, தமிழகத்தில்.

கோவையில் உள்ள அன்னூரில் தொழிற்பேட்டையை அமைப்பதற்காக விளைநிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு செய்திருந்தது. அதை அறிந்த பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை போராட்டத்தில் குதித்தார், ஒரு சென்ட் விளைநிலத்தை கூட கையகப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தார். விவசாய அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டன. விவசாயிகளின் போராட்டத்தை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு அந்த திட்டத்திற்கென தரிசு நிலங்களை மட்டுமே கையகப்படுத்துவோம் என்று அறிவித்தது.

அன்னூரில், விளை நிலங்களை மாநில அரசின் திட்டத்திற்காக கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த “தேசப்பற்றாளர்” அண்ணாமலை, அதை விட கூடுதலாக அதிக விளை நிலங்கள் பாதிக்கப்படும், பல நீர்நிலைகள் பாதிக்கப்படும் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக எதுவும் பேசாமல் வாய் மூடி மௌனமாகவுள்ளார். காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான், இந்த விமான நிலயத்திற்கான நிலம் “ஒன்றிய அரசின் புதிய விமான நிலைய கொள்கையின் படி”அதானிக்கு தான் செல்லும் என்பதால் அண்ணாமலை மௌனமான உள்ளார். பாஜகவின் இரட்டைநிலைப்பாடு, தமிழர் விரோத போக்கு தொடர்கிறது.”

Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *