Wed. Feb 28th, 2024

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசம் சுற்றுப்பயணம் சென்று விளையாடி வருகிறது. இந்தியா அணி வங்கதேச அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியை விளையாடியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி 133.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 404 ரன்கள் எடுத்தது.

வங்கதேச அணி முதல் இன்னிங்க்சில் 150 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.

இரண்டாவது இன்னிங்க்சில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.

513 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 113.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 324 ரன்கள் எடுத்து 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது.

Visits: 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *