Wed. May 29th, 2024

டைரக்டர் வினோத் அவர்களின் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் “துணிவு” திரைப்படமும், டைரக்டர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள “வாரிசு” திரைப்படமும் பொங்கல் அன்று வெளியாக உள்ளது.

போனிகபூர் தயாரித்துள்ள துணிவு திரைப்படத்தை தமிழ்நாட்டில் ரெட் ஜெயன்ட் நிறுவனமும், தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ள வாரிசு திரைப்படத்தை லலித்குமாரும் வெளியிடுகின்றனர்.

இரண்டு திரைப்படங்களுக்கும் சம அளவில் திரையரங்குகள் ஒதுக்க பட உள்ளது.

இந்நிலையில் வாரிசு தராயரிப்பாளர் தில் ராஜு கூறியதாவது ” தமிழ்நாட்டில் நடிகர் அஜித் குமாரை விட நடிங்கர் விஜய் விஜய் முன்னணியில் உள்ளார். இது வியாபாரம் எனவே வாரிசு திரைப்படத்திற்கு கூடுதல் திரையரங்குகளை ஒதுக்க உதயநிதி அவர்களை சந்திக்க உள்ளேன்” என கூறியிருந்தார்.

தமிழக தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் பதிலடி தரும் விதமாக வெளியிட்ட அறிக்கை ” ஐதராபாத்தில் இருந்து கொண்டு தயாரிப்பாளர் தில் ராஜு என்ன அர்த்தத்தில் பேசுகிறார் என்று புரியவில்லை. துணிவு படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இதுவரை ஒரு திரையரங்கை கூட கன்பார்ம் பண்ணவில்லை. ஒரு வேலை உதயநிதி துணிவு படத்தை வெளியிடுவதற்கு திரையரங்குகளை பிளாக் செய்து வைத்திருந்தால் சொல்வதில் நியாயம் இருக்கிறது.

தியேட்டர் உரிமையாளர்கள் அஜித் விஜய் என் பாகுபாடெல்லாம் பார்க்கமாட்டார்கள். ரெட் ஜெயன்ட் நிறுவனம் புக்கிங் கொடுத்த பிறகே முடிவெடுப்பார்கள். எங்களுக்கு தான் அதிக தியேட்டர்கள் வேண்டும் என்றால் கொடுத்து விடுவார்களா? மேலும் விஜய் தான் நம்பர் 1 என பேசியிருக்கிறார். ஆனால் இங்கு நம்பர் 1 கதை மட்டும்தான் என கூறியுள்ளார்.

திரைப்படம் நன்றாக இருந்தால் எல்லா நடிகரின் படமும் நல்லா ஓடும். விஜய், அஜித், கமல் படங்கள் அடுத்து வந்தது. பொன்னியின் செல்வன் வந்து வசூலை குவித்தது. அதற்காக கார்த்திக், ஜெயம் ரவி, விக்ரம் நம்பர் 1 என்று எப்படி சொல்ல முடியும். கமல்ஹாசன் அவர்களின் விக்ரம் வெளிவந்து வசூலை வாரி குவித்தது. அதற்காக கமல் அவர்களை நம்பர் 1 என்று சொல்லிட முடியாது.

Views: 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *