Sun. Sep 24th, 2023

விவோ நிறுவனத்தின் துணை நிறுவனமான IQOO நிறுவனம் IQOO 11 மற்றும் IQOO 11 PRO ஆகிய இரண்டு மாடல்களை வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போனகளை விவோ நிறுவனம் டிசம்பர் 8 ம் தேதி சீனாவில் வெளியிட்டது. இந்த ஸ்மார்ட்போன்கள் இப்போது சீன சந்தைகளில் கிடைக்கிறது.

விவோ நிறுவனம் சர்வதேச சந்தையில் இந்தவாரம் IQOO ஸ்மார்ட்போன்களை வெளியிடுகிறது.மேலும் இந்த போன்கள் சீனாவுக்கு அடுத்து தாய்லாந்தில் கிடைக்க உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

விவோ நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் IQOO சீரிஸ் போன்கள் இந்தியாவில் ஜனவரி 10,2023 அன்று வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

IQOO 11 PRO ஸ்மார்ட்போன் AnTuTu பென்ச்மார்க் ராஜா. இந்த போனில் லேட்டஸ்ட் சிப்செட் Qualcomm Snapdragon 8 Gen 2 (4nm) பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் மெமரி 512GB மற்றும் 16GB ரேம் ஆனது Adreno 740 GPU உள்ளது.

6.78 இன்ச் AMOLED டிஸ்பிளே மற்றும் 144Hz ரிப்பிரஷ் ரேட் கொண்டது. இதன் டிஸ்பிளே 1 பில்லியன் வண்ணங்களால் ஆனது மற்றும் HDR10+ சப்போர்ட் மேலும் இதன் ரிசல்யூசன் 1440×3200 பிக்சல்ஸ்.

பின்புற கேமரா 50MP மூன்று கேமரா பொருத்தப்பட்டுள்ளது. உலகிலேயே 8K வீடியோ 30fps கூடிய போன்களில் இந்த மொபைலும் அடக்கம். செல்பி கேமரா 16MP மற்றும் 4K வீடியோ சப்போர்டிங்க் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 4700mAh பேட்டரியுடன் வருகிறது. இந்த பேட்டரி சார்ஜ் 10 நிமிடங்களில் ஏறிவிடும். இதற்கு காரணம் இந்த போன் 200W சார்ஜ்ர் கொண்டது. மேலும் 50W வயர்லெஸ் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது.

IQOO 11 PRO ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூபாய்.60,000/- விலையில் கிடைக்கும். மேலும் இந்த மொபைல் கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும்.

Hits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *