Wed. Feb 21st, 2024

மதுரை : ஃப்ரி பயர், ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளில் பணத்தை இழந்த விரக்தியில், கள்ளிக்குடி அருகே உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தைச் சேர்ந்த உரக்கடை உரிமையாளர் தனசேகரன் மகன் வினோத்குமார் (21). டென்னிஷ் வீரரான இவர் மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே தனியார் இன்ஜினியரிங் கல்லூரி விடுதியில் தங்கி கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வரை, சக மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

நேற்று காலை உடன் தங்கியிருந்த மாணவர்கள் எழுந்து பார்த்தபோது வினோத்குமார் அறையில் இல்லை. தேடி பார்த்தபோது ஒரு அறை கதவு மட்டும் உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. பின்னர் கதவை உடைத்து பார்த்தபோது, மாணவர் வினோத்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

கள்ளிக்குடி போலீசார் கூறியதாவது “மாணவர் வினோத்குமார் ஆன்லைன் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர் என்பதும் ரம்மி மற்றும் ஃப்ரி பயர் போன்ற விளையாட்டுகளை விளையாடி அதிகளவில் பணத்தை இழந்ததால் விரக்தியடைந்து விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது” என கூறியுள்ளனர்.

Visits: 16

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *