Sun. Jun 23rd, 2024

கத்தாரில் நடைபெற்றுவரும் கால்பந்து உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியும் மொரோக்கோ அணியும் அல் பேட் மைதானத்தில் மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி வீரர் தியோ ஹெர்னாண்டஸ் 5 வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். முதல் பாதி ஆட்டம் 1-0 என்ற கணக்கில் முடிந்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்திலும் பிரான்ஸ் அணி வீரர் ராண்டல் கோலோ முவானி 79 வது நிமிடத்தில் கோல் அடித்தார். மொரோக்கோ அணி வீரர்கள் கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை.

இறுதியில் பிரான்ஸ் அணி 2-0 என்ற கணக்கில் மொரோக்கோ அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இறுதி போட்டியில் பிரான்ஸ் அணி அர்ஜென்டினா அணியிடம் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=jkHxrGMkhdA

Views: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *