Fri. Jun 21st, 2024

நாட்டின் நிகர ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் வர்த்தக பற்றாக்குறையின் விவரங்கள் உள்ளிட்ட நடப்பு கணக்கு பற்றாக்குறை (CAD) குறித்து தொழிற்சாலைகள் மற்றும் அத்துறை சார்ந்த வல்லுநர்களிடம் ஒன்றிய அரசு ஆலோசனை மேற்கொண்டதா என நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சகத்திடம் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.

அதன் விவரங்கள் பின்வருமாறு :

நாட்டின் நடப்பு கணக்குப் பற்றாக்குறையின் (CAD) விவரம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணிகள் என்ன என கேள்வி எழுப்பினார்.

நடப்பு கணக்குப் பற்றாக்குறையினால் (CAD) ஏற்படுகின்ற பிரச்சினைகள் குறித்து ஒன்றிய அரசு ஏதேனும் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தயாரித்துள்ளதா என கேள்வி எழுப்பினார்.

நாடு வாரியாக கடந்த எழு நிதியாண்டுகளுக்கான நிகர இறக்குமதிகள், நிகர ஏற்றுமதிகள் மற்றும் வர்த்தக பற்றாக்குறையின் விவரங்களை பட்டியலிட்டு தெரியப்படுத்தவும் என கேள்வி எழுப்பினார்.

சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை குறித்து எதேனும் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதா என்றும் அவ்வாறெனில் அதன் விவரங்கள் மற்றும் அதனால் ஏற்படுகின்ற விளைவுகள் என்ன என கேள்வி எழுப்பினார்.

கடந்த எழு நிதியாண்டுகளில் காலாண்டு வாரியாக பிரிக்கப்பட்டுள்ள நாட்டின் நிகர ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விவரங்களை பட்டியலிட்டு தெரியப்படுத்தவும் என கேள்வி எழுப்பினார்.

அதிகளவிலான ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு காரணமாக விளங்கும் சரக்கு மற்றும் சேவைத் தொழில்களின் பல்வேறு துறைகளின் விவரங்களை தெரியப்படுத்தவும் என கேள்வி எழுப்பினார்.

நாட்டின் நடப்பு கணக்குப் பற்றாக்குறை (CAD) தொடர்பாக தொழிற்சாலைகள் மற்றும் அத்துறை சார்ந்த வல்லுநர்களுடன் ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தியிருக்கிறதா என்றும் அப்படியானால் அதன் விவரங்களைத் தெரியப்படுத்தவும் என கேள்வி எழுப்பினார்.

ஒன்றிய அரசு கொடுத்த பதில்:

Views: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *