Fri. Jun 21st, 2024

பங்களாதேஷ் சுற்றுப்பயணம் சென்று இந்திய அணி விளையாடி வருகிறது. இன்று நடந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 409 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷான் 210 (131) ரன்களும், விராத் கோஹ்லி 113 (91) ரன்களும் எடுத்தனர்.

410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 34 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 182 ரன்கள் எடுத்து 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் படுதோல்வியை சந்தித்தது.

Views: 59

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *