Fri. Jun 21st, 2024

அரியலூர் மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிக்கை “அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட காசாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த செம்புலிங்கம் என்பவர் இறந்தது குறித்து தவறான தகவல் சமூக வலைதளங்களில் பரப்பபட்டு வருகிறது. செம்புலிங்கம் என்பவரை காவல் துறை கைது செய்யவோ, காவல் நிலையத்திற்கு அழைத்து வரவோ இல்லை.

செம்புலிங்கம் அவர்களது இறப்பு குறித்து செம்புலிங்கத்தின் குடும்பத்தினர் கொடுத்த புகார் அடிப்படையில் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து வருவாய் கோட்டாட்சியர் அவர்களால் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வழக்கின் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

காவல்துறை மீது அவதூறு பரப்பும் விதத்திலோ, வன்முறை தூண்டும் விதத்திலோ, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் நோக்கிலோ அல்லது விசாரணை திசை திருப்பும் நோக்கிலோ, யாரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.”

Views: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *