Tue. Apr 23rd, 2024

தமமுக, தலைவர் திரு.பெ.ஜான்பாண்டியன் கோரிக்கை “தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க அரசு முன்வராதது ஆசிரியர் பெருமக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றவர்களை அதனடிப்படையில் ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும். போட்டித் தேர்வுகளை நடத்தக்கூடாது என்ற அவர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. அதை தமிழக அரசு ஏற்க மறுப்பது நியாயமற்றது.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எண்-177-ல், 2013 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்கள் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 9 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் வாடி வருகின்றனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பினையை வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

திமுக – ஆட்சிப் பொறுப்பேற்று 19 மாதங்கள் கடந்த நிலையிலும், திமுகவின் தேர்தல் அறிக்கையை நம்பி வாக்களித்து ஓராண்டு காலமாக காத்திருக்கின்றனர் ஆசிரியர் பெருமக்கள்.

கடந்த ஜனவரி மாதம் முதல் சுமார் 8 அரப் போராட்டங்களை நடத்தி கடந்த அக்டோபர் 3ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். தமிழக முழுவதும் சுமார் 30,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள சூழ்நிலையில் ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவச் செல்வங்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ஓர் ஆசிரியர் பணியிடம் கூட நியமிக்காத தமிழக அரசு தற்போது ஆசிரியர் நியமனத்திற்கு வயது வரம்பை குறைத்து அரசாணை எண் 149-ஐ வெளியிட்டுள்ளது. அரசாணை 149-ஐ தமிழக அரசு நீக்கம் செய்து, பழையபடி பணிப்பெறும் வயதை 57-ஆக உயர்த்திட வேண்டும்.

காலிப் பணியிடங்களை போட்டித் தேர்வின்றி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை வைத்து நிரப்ப வேண்டும். எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாட்டில் போட்டித் தேர்வின்றி, ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வேலைவாய்ப்பினை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.”

Visits: 17

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *