Wed. May 29th, 2024

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் நிறுவனர் & தலைவர் பெ.ஜான்பாண்டியன். எம்.ஏ., அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர சிறப்பாசிரியர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.


அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஓவியம் , கணினி, தையல் , தோட்டக்கலை போன்றவற்றிற்கு சிறப்பு ஆசிரியர்களாகப் பணிபுரிந்து பல்வேறு பாடங்களைக் கற்பித்து வருகின்றனர்.


இது “சர்வ சிக்ஷா அபியான் “திட்டத்தின் மூலம் 2012ல் 5000 ரூபாய்க்கு தமிழக அரசால் பணி அமர்த்தப்பட்டனர். அந்த திட்டம் “சமக்ர சிக்சா” (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வரும் சிறப்பு ஆசிரியர்களுக்கு தற்போது மாதம் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.


பணி நிரந்தரம் தொடர்பாக திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தும், தற்போதைய திமுக அரசு அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முன்வராதது சிறப்பாசிரியர் பெருமக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.


பத்தாண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டு வரும் பணி நிரந்தர ஆணையை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்துகிறேன்.”

Views: 21

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *