Wed. Feb 28th, 2024

கத்தாரில் நடைபெற்றுவரும் கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போர்ச்சுக்கல் அணியும் சுவிட்சர்லாந்து அணியும் மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணி வீரர்கள் கோன்கலோ ராமோஸ் 17 வது நிமிடத்திலும் , பெப்பே 33 வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர். முதல் பாதி ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணி 2-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதி ஆட்டத்திலும் போர்ச்சுகல் அணியின் கையே ஓங்கியிருந்தது. போர்ச்சுக்கல் அணியில் கோன்கலோ ராமோஸ் 51 மற்றும் 67 வது நிமிடத்திலும், ரஃபேல் கெரிரோ 55 வது நிமிடத்திலும் , ரஃபேல் லியோ 90+2 வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். சுவிட்சர்லாந்து சார்பில் மானுவல் அகஞ் 58 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இறுதியில் போர்ச்சுக்கல் அணி 6-1 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்து அணியை தோற்கடித்தது.

Visits: 12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *