Wed. Feb 28th, 2024

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மில் வேலைக்காக குஜராத்திற்கு ஆயிரக்கணக்கான தமிழர்கள், 1990 தொடக்கத்தில் இடம் பெயர்ந்துள்ளனர். இவர்களின் குழந்தைகள் கல்வி கற்க குஜராத்தில் 1910-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது இப்பள்ளிகள்.இந்நிலையில், அகமதாபாத்தில் நூறு ஆண்டுக்கு மேலாக செயல்பட்டு வந்த தமிழ் பள்ளிகள், கடந்த 2 ஆண்டுக்கு மேலாக மூடப்பட்டு இருப்பதாக ஊடகங்கள் வாயிலாக வெளியான செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.பள்ளி நடத்துவதற்கான செலவை தமிழ்நாடு அரசே ஏற்க முன்வந்த போதும், குஜராத் அரசு அதனை ஏற்க மறுக்கிறது. இதன் காரணமாக, அங்கு வசிக்கும் தமிழர்களின் குழந்தைகள் தமிழ் படிக்க முடியமால் தவித்து வருவது வேதனை அளிக்கிறது.”

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *