Wed. Feb 28th, 2024

பாஜகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருச்சி சூர்யா முழுமையாக கட்சியிலிருந்து விலகுவதாக டுவிட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது “அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி , இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் . வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும்.

அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் அவர்கள் மாற்றப்பட வேண்டும் . இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும் . இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன் . உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி”

Visits: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *