டிசம்பர் 1 ஆம் முதல், ரிசர்வ் வங்கி, இந்தியாவில் டிஜிட்டல் currency யை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அனுமதித்தது. இதை CBDC என்று அழைக்கின்றனர். அதாவது, Central Bank Digital Currency. நமது வசதிக்காக e-Rupee என்றே அழைப்போம்.
இந்த பயன்பாட்டை பைலட் முறையில் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல, ரிசர்வ் வங்கி நான்கு வங்கிகளை தேர்வு செய்துள்ளது. அவை:
1) State Bank of India
2) ICICI Bank
3)Yes Bank
4) IDFC Bank
இந்த வங்கிகள், தங்களிடம் கணக்கு வைத்திருக்கும் ஒரு சில தனிநபர்கள் மற்றும் வியாபார நிறுவனங்களை தேர்வு செய்து அவர்களுக்கு SMS மற்றும் ஈமெயில் மூலம் தகவல் அனுப்பப்படும். தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் விருப்பப்பட்டால், அவர்கள் Google Playstore க்கு சென்று e-Rupee app ஐ தரவிறக்கம் செய்யவேண்டும். அவ்வாறு செய்கையில், அந்த app, அவர்களது SIMஐ வெரிஃபிகேஷன் செய்யும்.
வெரிஃபிகேஷன் முடிந்த பிறகு, அவர்களால் e-wallet ஒன்றை உருவாக்க முடியும். அந்த e-wallet அவர்களது மொபைலில் மட்டுமே வேலை செய்யும் / செல்லுபடியாகும். e-wallet உருவாக்கியவுடன், அதை அவர்களது சேமிப்பு கணக்குடன் இணைக்க வேண்டும். அதற்கான வழிமுறை அந்த e-wallet லேயே இருக்கும்.
சேமிப்புக் கணக்கை e-wallet உடன் இணைத்தபின்னர், அவர்கள் தங்களின் சேமிப்புக் கணக்கில் உள்ள பணத்தை e-wallet க்கு மாற்றிக்கொள்ளலாம். e-wallet ல் இருக்கும் பணம் e-Rupee யாக கருதப்படும்.
இவ்வாறு மாற்றப்பட்ட பணத்தை, அவர்களால் மற்றோரு e-wallet க்கு மட்டுமே மாற்ற முடியும். தேர்ந்தெடுக்கப் பட்ட வியாபார நிறுவனங்கள், QR Code மூலம், பணத்தை e-Rupee யாக மாற்றிக் கொள்ளலாம். Customers payment செய்யும்போது அந்த பணம் e-Rupee யாக வியாபார நிறுவனங்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
தற்போது, இந்த பரிமாற்றங்கள் அனைத்தும் ஒரு சிறிய குழுவுக்குள் (Closed User Group) மட்டுமே இயங்கும்.
இந்த e-Rupee யானது cash போன்றது. Cash என்னென்ன denominations ல் இருக்கின்றதோ, அதே denominationsல் இதுவும் இருக்கும். ஆனால் cash போன்று e-Rupee யால் வட்டி வருமானம் ஈட்ட முடியாது. e-walletல் உள்ள பணத்தை கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு கொண்டு பயன்படுத்த முடியாது.
இந்த e-wallet சேவையை, தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் பின்வரும் நான்கு நகரங்களில் மட்டுமே செயல்படுத்துகின்றன.
1) New Delhi
2) Mumbai
3) Bengaluru
4) Bhuvaneshvar
இதற்கு அடுத்தபடியாக பின்வரும் நான்கு வங்கிகளுக்கு இந்த pilot விரிவாக்கம் செய்யப்படும்.
1) HDFC
2) Kotak
3) BoB
4) UBI
இந்த நான்கு வங்கிகளும் சேர்ந்தபிறகு, இந்த சேவை பின்வரும் நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும்.
Shimla, Lucknow, Indore, Ahmedabad, Gangtok, Guwahati, Patna, Hyderabad and Kochi.
இந்த பைலட் முறை, e-Rupee/e-wallet ன் சேவை தரத்தினையும், system செயல்பாடுகளையும் மதிப்பிடுவதற்காக மட்டுமே செயல்படுத்தப் படுகின்றது. இந்த செயல்பாடுகளில் கிடைக்கும் feedback/learnings வைத்து, பின்னர் மற்ற பெரிய நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். படிப்படியாக மற்ற வங்கிகளுக்கும் இந்த சேவையை தங்களது வாடிக்கையாளர்களுக்கு அளிக்க அனுமதிக்கப்படும்.
மிகச் சுலபமாக பணம் செலுத்த/பரிமாற்றம் செய்ய UPI இருக்கும்போது இது எதற்கு என்கிற கேள்வி எழலாம்.
இரண்டுக்கும் ஒரே வித்தியாசம் தான்.
UPI – ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக் கணக்கிற்கு பணப் பரிமாற்றம் செய்யும்.
இதனால் உங்கள் வங்கிக்கு, பணம் எங்கிருந்து எங்கு சென்றது? யாரிடமிருந்து யாருக்கு சென்றதென்கிற Audit Trail இருக்கும்.
e-wallet – மேற்படி சொன்ன எந்த தகவல்களும் வங்கிகளுக்கு தெரியாது. Cash Transactions போன்று, இதில் Audit Trail இருக்கவே இருக்காது.
தற்போதைக்கு சிறிய பரிமாற்றங்கள் மட்டுமே அனுமதிக்கப் படுகிறது. டெக்னாலஜி/ யின் பயன்பாடு மற்றும் மக்களின் வரவேற்பை பொறுத்து இது விரிவாக்கம் செய்யப்படும்.
- திரு K.ராஜேஷ்(Twitter@rajeshkmoorthy)நிறுவனர்-ஸ்கைமேன் இன்வஸ்மென்ட்ஸ்
Hits: 35