Wed. Feb 21st, 2024

04.12.2022 அன்று தாம்பரம் காவல் நிலைய குற்றப் பிரிவு பெண் காவலர் காளீஸ்வரி தாம்பரம் பேருந்து நிலைய பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது, அங்கு வந்த நின்ற பேருந்தில் ஏறிய வட மாநில இளைஞர் ஒருவர், பேருந்தில் இருந்த பயணி ஒருவரிடம் இருந்து விலை உயர்ந்த ‘ஐ- போனை’ பறித்துக் கொண்டு பேருந்தில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தான். அவன் ஓடுவதை கண்டு சந்தேகம் அடைந்த பெண் காவலர் காளீஸ்வரி அவனை அரை கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தார்.

சாதுரியமாக செயல்பட்டு செல்போன் திருடனை மடக்கி பிடித்த பெண் காவலர் காளீஸ்வரியை, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் /படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திர பாபு, IPS., அவர்கள் டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் அழைத்து சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.

Visits: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *